
கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரும் சித்தரதுர்கா தொகுதி பாஜக எம்.பியுமான கோவிந்த் கஜ்ரோல். இவர் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஜ்ரோல் சமீப காலமாக பள்ளியில் மாணவ மாணவிகள் கழிவறை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் எதிர்ப்புகளை பெற்று வருகிறது குறித்து பேசும்போது மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறினார்.
ஜப்பான் நாட்டில் மாணவர்களும் ஆசிரியர்களும் கழிவறையை சுத்தம் செய்கின்றனர். நான் படிக்கும்போது தங்கும் விடுதியை பெருக்கி சுத்தம் செய்திருக்கிறேன். மாணவனின் கையில் ஆசிரியர் துடப்பத்தை கொடுப்பதை குற்றமாக கூறினால் சுத்தம் செய்யும் வேலை இழிவான செயல் என்று மாணவனுக்கு எண்ணம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக எம் பி யின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாணவர்கள் சுத்தத்தை கற்றுக்கொள்ள வேண்டும் தான். ஆனால் அது குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களோ அல்லது பெண் மாணவிகள் மட்டும் செய்ய வேண்டிய வேலையாகவோ மாறும்போது அது குற்றமாகிறது என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.