கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அதன் பின்பு மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதேபோன்று பாலியல் வன்கொடுமைகள் ஈடுபட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. கேரளா மட்டுமல்ல மற்ற திரை உலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என பல புகார்கள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவைப் போல ஊடகங்கள், தமிழ் தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறையிலும் பெண்கள் இத்தகைய பாலியல் வன்கொடுமையை கடந்து செல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பாக இருக்க நமக்கு இடம் தேவை. எனக்கும் 2 மகள்கள் உள்ளனர். இனியாவது தமிழ் சினிமா துறை ஏதாவது செய்ய வேண்டும், தண்டனையை உறுதிப்படுத்தினால் தான் அவர்கள் பயப்படுவார்கள் என்றார்.