உத்தர பிரதேஷ் மாநிலம் பக்ரீச் பகுதியில் கடந்த சில தினங்களாக ஓநாயின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. மனிதர்களை தின்னும் இந்த ஓநாயால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஓநாய் ஒன்று தனது தாயின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் பராஸ் என்பவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.

சத்தம் கேட்டு விழித்து பார்த்த சிறுவனின் தாயான குடியா சற்றும் தாமதிக்காமல் ஓநாயின் மீது பாய்ந்து அதன் கழுத்தை இறுக்க துவங்கினார். தனது மகனின் பிடியை ஓநாய் விடும் வரை தனது முழு பலம் கொண்டு ஓநாயின் கழுத்தை இறுக்கியவர் சிறுவன் கீழே விழுந்ததும் உதவிக்காக ஆட்களை அழைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஓநாய் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து சிறுவனின் தாய் குடியா கூறுகையில் மீண்டும் அந்த ஓநாய் வந்தால் கொன்று விடுவேன் என கூறியுள்ளார்.