
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் மும்பையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியான மெகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து உள்ளனர். ஆனால் ஒரு சிறிய பிரச்சனையினால் இந்த காதல் ஜோடி சண்டையிட்டு பிரிந்து விட்டனர்.
பிரிவுக்குப் பின் காதலனை பழிவாங்க நினைத்த ஸ்வேதா தனது அந்தரங்க வீடியோவை காதலனுக்கு அனுப்பி வைத்து தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். இதனால் மெகுல் தனது காதலியை பார்க்க புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு மெகுலை ஒரு விடுதியில் தங்க வைத்து மெகுலுக்கு தெரியாமல் அவரது நிர்வாண வீடியோவை எடுத்துக்கொண்டார்.
பின்னர் அந்த காணொளியை அனுப்பி மெகுலை பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார். இதற்கு ஸ்வேதாவின் தோழிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மெகுல் ஆரம்பத்தில் ஹவாலா மூலமாக 50 லட்சம் பணத்தை ஸ்வேதாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் மேலும் மேலும் பணம் வேண்டும் என்று ஸ்வேதா மற்றும் தோழிகள் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது ஒரு கட்டத்தில் அவர்களிடையே தகராறாக மாறிய நிலையில் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உண்மைகள் வெளியில் வர ஸ்வேதா மற்றும் அவரது தோழிகள் கைது செய்யப்பட்டனர்.