
பிரபல ஹூரன் ஆராய்ச்சி நிறுவனம் 2024ல் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட்டது. இந்த பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை படித்தார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 11.61 லட்சம் கோடி ஆகும். அதன் பிறகு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 10.14 லட்சம் கோடி ஆக இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் ஷிவ் நாடார் 3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் சைரஸ் பூனாவாலா 2.89 லட்சம் கோடியுடன் நான்காம் இடத்திலும், திலிப் சங்க்வி 2.49 ஐந்தாமிடத்திலும் இருக்கிறார்கள். அதன் பிறகு இந்தியாவில் 1539 பேரிடம் தலா 1000 கோடி சொத்து மதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் கடந்த வருடத்தை விட 220 பேர் அதிகமாக இடம்பிடித்துள்ளனர். அதோடு இந்த பட்டியலில் முதல் முறையாக பிரபல நடிகர் ஷாருக்கானும் இடம்பெற்றுள்ளார். மேலும் அவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 7500 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.