
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதாவது இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அண்ணாமலை வீட்டில் உள்ள ஒரு பூச்சி தான். அவரால் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது. அதிமுகவை அழிக்க முடியவில்லை என்ற விரக்தியில் தான் அப்படி பேசுகிறார். 3 வயது குழந்தையான அண்ணாமலையால் ஆலமரமாக இருக்கும் அதிமுகவை அழிக்க முடியாது.
பாஜக என்ற ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜர் அண்ணாமலை. அண்ணாமலையை பொதுமக்கள் ஒரு பியூஸ் போன பல்பு போல தான் பார்க்கிறார்கள். பாஜகவுக்கு ஆட்சி என்பது பகல் கனவு. அவர்களால் ஒரு எம்எல்ஏ சீட் கூட பெற முடியவில்லை. மேலும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியாத போது அண்ணாமலை என்ன அவருடைய முப்பாட்டனே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.