
நாகையில் கலைஞர் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. யார் கட்சி ஆரம்பித்தாலும் அதைப்பற்றி நமக்கு கவலை கிடையாது. ஒரு அமாவாசை தாங்கும். அல்லது இரு அமாவாசை தாங்கும். அதற்கு மேல் தாங்காது. ஏற்கனவே இருக்கும் கட்சியை பார்த்து புதிய கட்சி தொடங்குவது புலி பூனையை பார்த்து சூடு போட்டுக் கொண்டது போன்றதாகும்.
யார் யாரெல்லாம் கட்சி தொடங்கினார்கள். கட்சி தொடங்குபவர்கள் எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. திமுகவிலிருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்ஜிஆரால் நிலைத்து நிற்க முடிந்தது. இளைஞர்கள் இன்று புதிய கட்சிக்கு செல்வதற்கான நோக்கம் பதவி கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான். திமுக மட்டும் தான் கொள்கை லட்சியம் போன்றவைகளை நிலையாக கொண்ட கட்சி. மேலும் ஆரம்பத்தில் என்ன அரவணைப்பு திமுகவில் வழங்கப்படுகிறதோ கடைசி வரை அது இருக்கும் என்று கூறினார். மேலும் நடிகர் விஜய் தற்போது புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் அவரை விமர்சித்து தான் ஆர்எஸ் பாரதி இப்படி பேசியுள்ளதாக கூறப்படுகிறது