தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அனந்தபுரி பாலகிருஷ்ணாவின் 109 ஆவது படம் படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது ஊர்வசி ரௌடேலா காயமடைந்துள்ளார். விரலில் அடிபட்ட நிலையில் அதனை காணொளியாக பதிவு செய்து தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஊர்வசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் விரலில் பட்ட சிறிய காயத்திற்கு மருத்துவமனையில் அனுமதியா என்றும் அனுதாபம் உங்களை குணப்படுத்தாது என்றும் விரலில் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண் என்றும் கேலி செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C-7VGlbI_D9/