
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்தார். அதாவது நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி youtubeபில் அவதூறு பரப்புவதாகவும் தேவையில்லாமல் பொதுமக்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயருக்கு கழகம் ஏற்படுத்துவதாகும் கூறி ரூ.5 கோடி இழப்பீடு வழங்க கோரி மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்குக்கு நடிகர் சிங்கமுத்து பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் சிங்கமுத்துவுக்கு இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.