
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்காக அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். அதன் பிறகு அரசின் பல திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணமாகும். இந்நிலையில் தமிழகத்தில் தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
அதோடு கூடுதலாக 15,000 மெட்ரிக் டன் கோதுமையை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக விவசாயிகள் நீண்ட காலமாக பாமாயில் எண்ணைய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் இதன் காரணமாக கேழ்வரகோடு ரேஷன் கடைகளில் கூடிய விரைவில் தேங்காய் எண்ணெயும் விற்பனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.