
தமிழ்நாடு மின்சார வாரியம் தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக நுகர்வோர்களுக்கு போலியான குறுஞ்செய்தி விடுத்து அதன் மூலம் மோசடி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உங்களின் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால் இன்று இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இதனை தவிர்க்க குறைந்தபட்ச தகவல்களை பெற வேண்டும் அல்லது ரூ.3 செலுத்த வேண்டும் என்று இருக்கும்.
இப்படி மெசேஜ் வந்தால் யாரும் பதட்டப்படக்கூடாது. அதோடு அதில் உள்ள லிங்கையும் கிளிக் செய்யக்கூடாது. அதற்கு பதில் நீங்கள் பொறுமையாக https://tnebltd.gov.in என்ற செயலியில் நீங்கள் மின்கட்டணம் தொடர்பாக சரி பார்க்கலாம். மேலும் உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்தால் அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளாமல் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.