மத்திய பிரதேசம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கொல்கத்தாவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. அங்கு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குள் புகுந்து கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கி அட்டூழியம் செய்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியானதால் மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் கூட்டு பாலியல் பலாத்கரத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில் மருத்துவமனைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியதால் தடயங்களை அழித்துள்ளதாக ஆளும் கட்சியை எதிர்கட்சிகள் கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை ஆலியா பட் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை அரங்கேறி உள்ளது. பெண்கள் எங்கும் எப்போதும் பாதுகாப்பானவர்கள் இல்லை என்பதை புரிய வேண்டியுள்ளது. மேலும் நிர்பயா பெருந்துயருக்கு பிறகு 10 வருடங்களாகியும் இன்னும் எதுவும் மாறவில்லை என்று பதிவிட்டுள்ளார். அதோடு பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)