
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொது இடங்கள் மற்றும் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்குவது அவமானம் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும் அதனை அவசரமாக விசாரிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.