பாதுகாப்பு அமைச்சகத்தின் எல்லை சாலை பிரிவில் காலியாக உள்ள 466 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ட்ராட்ஸ்மேன், சூப்பர்வைசர், டிரைவர் மெக்கானிக்கல் ட்ரான்ஸ்போர்ட் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bro.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கூடுதல் விவரங்களை அறிய மேற்கண்ட இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
