
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நல்ல மழையால் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில் 9 மாவட்டங்களில் இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.