
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி புதுக்கோட்டை, புதுச்சேரி, நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுது, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை ஒரு சில இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று நாளை டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.