கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இன்போசிஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தற்போது வரி கேட்டு ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த 2022 மார்ச் மாதம் வரை வரி ஏய்ப்பு என்பது நடந்துள்ளது. அதன்படி மொத்தம் ரூ.32,403 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இந்த தொகையை தற்போது நீங்கள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள அந்த நிறுவனம் ஏற்கனவே அனைத்து வரிகளையும் செலுத்தி விட்டதாகவும் தற்போது நீங்கள் கூறியது ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வராது என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அலுவலரான மோகன்தாஸ் பாய் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் இது இருப்பதிலேயே மோசமான பயங்கரவாத வரி விதிப்பு. வரி செலுத்துபவர்களை ஏய்ப்பதற்கு ஜிஎஸ்டி அமைப்பு அவர்களின் வியாபாரத்தில் தலையிட்டு கற்பனைக்கு எட்டாத விஷயங்களை செய்து வருகிறது என்று கூறியுள்ளார். இதேபோன்று பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அந்த pre showcase நோட்டீசை திரும்பப் பெற்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
