கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த  நிலச்சரிவில் 270 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் இருப்பதாக  தெரிவித்துள்ளார்..

இது குறித்து தனது   x – தளத்தில்  “வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணைநிற்போம் .”என்று பதிவிட்டுள்ளார்.

“>