
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தற்போது மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அதன்படி 123 ரூபாய் கட்டணத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 14 ஜிபி 4ஜி டேட்டாவை ஜியோ வழங்குகின்றது. இந்த திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. புதிதாக வெளியான ஜியோ பாரத் ஜே1 போனுக்கானது என்று ஜியோ அறிவித்துள்ளது