மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை, நீலகிரியில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் வடக்கு அரபி கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.