இலங்கை நாட்டின் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இருக்கிறார். இந்நிலையில் இலங்கை நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதியை தற்போது அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் இந்த தேர்தலில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.
