
ரயில்வே துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே துறையின் பணியில் சேர்வது என்பது நாடு முழுவதும் இருக்கும் பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது.
ரயில்வே துறைகளில் அவ்வப்போது காலியாகும் பணியிடங்களுக்கு ஆண்டு தோறும் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு முறைப்படி நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரயில்வே துறையில் தற்போது காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கெமிக்கல் சூப்பர்வைசர் மற்றும் உலோகவியல் உள்ளிட்ட சில பிரிவுகளில் காலியாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கான வயதுவரம்பு 18 முதல் 36 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு முடிந்து தேர்ச்சி பெற்ற பின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின் மருத்துவ தேர்வுகள் நடத்தப்படும். இந்த பணிகளுக்கான தொடக்க சம்பளமாக ரூபாய் 35,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலியாக உள்ள துறைகள் குறித்தும் அதற்கான கல்வி தகுதி குறித்தும் தெரிந்துகொள்ள ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் (https://www.rrbchennai.gov.in ) சென்று பார்வையிடவும்.