2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதில் அனைத்து துறைகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. அதேசமயம் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி பட்ஜெட் தாக்கலின் போது குழந்தைகளுக்கென வத்சல்யா என்ற பிரத்யேக பென்ஷன் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளுக்காக முதலீடு செய்யலாம். குழந்தைகள் வயது வந்தவுடன் சாதாரண NPS கணக்கை மாற்றலாம். NPS கணக்கை திறந்து முதலீடு செய்தால் மொத்த தொகையை பெறலாம். மாதாந்திர ஓய்வூதிய வசதியும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
