மதுரை தபால் தந்தி நகர் பாமா நகரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி என்பவருடைய மனைவி சடைஸ்வரி. இவர்களுக்கு நான்கு வயதில் சிவரஞ்சனி என்ற மகளும் ஒன்பது மாதத்தில் சிவ தாரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமி சிவரஞ்சனிக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தாலும் தொடர்ந்து சிறுமிக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்த காரணத்தால் வீட்டிலிருந்த இருமல் டானிக்கை சிறுமிக்கு பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இருந்தாலும் குணமடையாததால் சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து சாப்பிட்டதால் சிறுமி உயிர் இழந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.