வீடு கட்டுவதற்காக நாம் வங்கியில் கடன் வாங்குவது வழக்கம்தான் .ஆனால் நாம் வாங்கிய வங்கியில் வீட்டுக் கடனை முழுவதுமாக திருப்பி கட்டியிருப்போம். அதன்பிறகு கடன் வாங்குவதற்காக நாம் கொடுத்த அசல் ஆவணம், NOC  சான்றிதழ், கடன் கணக்கு அறிக்கை ஆகியவற்றை வங்கியிடமிருந்து நமக்கு 30 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

அப்படி கொடுக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு 5000 ரூபாய் வீதம் என்று எத்தனை நாட்கள் வங்கி நமக்கு கொடுக்க தாமதம் ஆகிறதோ அத்தனை நாள் வரைக்கும் பணத்தை வங்கி நமக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் விதி.