உத்திரபிரதேசம் மாநிலத்தில் புதிய வகை நாகப்பாம்பின் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புது வகையான நாகப்பாம்பை வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இதன் தோற்றமானது வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று கூறினர்.

இதற்கு ஆராய்ச்சியாளர்கள் “அல்பினோ ஸ்பெக்டாக்கிளிட் கோப்ரா” என பெயர் சூட்டியுள்ளனர். இந்த நாகப்பாம்பு அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ராகுல் நிஷாத் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இவர் சூழலியல் மறுசீரமைப்பு மையத்தின் ஆராய்ச்சி மாணவர். மேலும்  இந்த நாகப்பாம்பை ஈரநிலங்களில் கண்டுபிடித்தாக கூறியுள்ளார்.