இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதற்கு பொது மக்களுக்கு உதவுவதற்காக “MAY I HELP YOU”  வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை நிரப்புதல், தேவையான ஆவணங்கள் என்னென்ன? அலுவலகத்திற்கு நேரில் வரும் நேரம் போன்ற அடிப்படை சந்தேகங்களுக்கு இங்கு விளக்கம் பெறலாம். இடைத்தரகர்களிடம் சிக்காமல் இருப்பதற்கு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்க: passportindia.gov.in