வருமானவரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்டவற்றுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு தொலைந்து விட்டால் எப்படி வேறு கார்டு பெறுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு பான் கார்டு எண், ஆதார் எண், பிறந்த தேதி மற்றும் கேப்சா ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இதனைத் தொடர்ந்து புதிதாக திறக்கும் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட சுய விபரங்களை ஆன்லைன் மூலமாக நிரப்ப வேண்டும். பிறகு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதுபோல சமர்ப்பித்தால் வீட்டுக்கு தபாலில் வருமான வரி துறையால் பான் கார்டு அனுப்பி வைக்கப்படும். இதற்கு இரண்டு வார காலம் அவகாசமாகும். அந்த பான் கார்டு வழக்கமான நமது பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்.