சென்னையில் இதயத்தில் பெரிய ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட வழக்கறிஞர் எம் . ஸ்டாலின் மணி(58) என்பவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை மூலமாக ரத்த குழாயில் ஸ்டென்ட் பொருத்தி அடைப்பை சரி செய்து மறுவாழ்வு அளித்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். பூரண குணமடைந்த அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துள்ளார்.