தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மிகப் பிரமாண்டமான பொருட் செலவில் தயாராகி வரும் நிலையில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். அதன்பிறகு பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கும் நிலையில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ட்ரெய்லர் அப்டேட் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 13ஆம் தேதி கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் இரு பாகங்களாக உருவாகி வரும் நிலையில் ‌ முதல் பாகம் அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.