இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தது வ்ருகிறது. சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் தனிப்பட்ட நபர்களுடைய செல்போனை ஹேக் செய்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் பரிசு விழுந்திருக்கிறது என்று சொல்லி SMS அனுப்பி  மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து  காவல்துறையினர் கூறுகையி, சமூக வலைதள கணக்குகளுக்கு ஒரே  PASSWORD பயன்படுத்தாமல்,  பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற எச்சரித்திருக்கும் சைபர் க்ரைம் போலீசார், இது போன்ற மோசடிகளில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும்  என்று கூறியுள்ளனர்.