ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இந்திய அணியின் அடுத்த புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்பீர் இந்தியாவின் தோல்வியை நினைத்து இரவு முழுவதும் தூங்காமல் அழுததாக கூறியுள்ளார். அதாவது கடந்த 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஒரு ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது. அந்த போட்டியை நினைத்து அன்றைய தினம் தூங்காமல் இரவு முழுவதும் அழுததாக கம்பீர் கூறியுள்ளார். அதற்கு முன்பும் பின்பும் அப்படி அழுதது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்தப் போட்டி நடைபெறும் சமயத்தில் கம்பீருக்கு வயது 11 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.