
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் தற்போது கர்ணாபுரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் செல்கிறார்கள். அந்த வகையில் கர்ணாபுரத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்ததோடு இறுதிச்சடங்குக்கு தலா ரூ.10,000 வழங்கினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியான முடிவெடுத்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மேலும் வருகின்ற 24-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கும் என்று கூறினார்.