கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வாந்தி, வயிற்று எரிச்சல் பாதிப்பு உள்ளோரை 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
