தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நடிப்பில் உருவாகி, தணிக்கை மற்றும் பல்வேறு லீக் விவகாரங்களால் ரிலீசாகாமல் முடங்கிக்கிடந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இப்போது ஓடிடி (OTT) சந்தையில் திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த அமேசான் பிரைம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், விஜய் இப்போது முதலமைச்சராக இருப்பதால் இந்தப் படத்தை வாங்க மீண்டும் மல்லுக்கட்டி வருகின்றன. இதற்கிடையே, திரையில் ‘தளபதி விஜய்’ என்பதற்குப் பதிலாக ‘முதல்வர் விஜய்’ என்றே அவரது பெயரைப் போட வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த உணர்ச்சிகரமான வேண்டுகோளை ஏற்று, தற்போதைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு விஜய்யின் பெயரை மாற்றும் பணிகளைப் படக்குழு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு வரத் தயாராகி வருவது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் ஒருசேர எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.