தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசுப் விஜய்க்கு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள  விஜய்க்கும், வெற்றிக்கு உழைத்த தவெக கட்சியினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என ரஜினி பதிவிட்டிருந்தார். சூப்பர்ஸ்டாரின் இந்த வாழ்த்துக்கு உடனடியாகப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், “தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்கள், அரசியலிலும் இது போன்ற கண்ணியமான உறவைப் பேணி வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>