கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் மூலமாக விவசாயிகளுடைய பயன்பாட்டிற்கு விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு கொடுக்கப்படும் அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்காக தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விவசாய இயந்திரங்கள் கருவிகள்  இருப்பில் இருக்கின்றன.

டிராக்டர், மினி டிராக்டர், நெல் நடவு எந்திரம், நெல் அறுவடை எந்திரம், கரும்பு அறுவடை எந்திரம் உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் உள்ளன . விவசாயிகள் உழவர் செயலி மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் . பதிவு செய்த பிறகு விவசாயிகளின் தொலைபேசிக்கு எந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான எஸ்எம்எஸ் அனுப்பப்படும். முன்பதிவு செய்து குறித்த தேதி மற்றும் நேரத்தில் விவசாயிகள் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தலாம். மேலும் விவசாயிகள் rcs.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக Coop e-வாடகை சேவையின் மூலமாக முன்பதிவு செய்து பயன்படுத்தலாம்.