அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவர் சங்கீதா. கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இந்த தம்பதிக்கு பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதா தன்னுடைய பெற்றோர் ஊரான உட்கோட்டையில் இருந்து வந்த நிலையில் இன்று  அதிகாலையில் தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டி தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கி இருக்கிறார்.

பின்பு கண்விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனையடுத்து தேடி பார்த்ததில் வீட்டின் பின் உள்ள தண்ணீர் பேரலில் குழந்தை மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து  காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையில் தாத்தா பாட்டியிடம் விசாரித்து வருகின்றனர்.