இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பத்தினர் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதன்படி பிபிஎல் குடும்பங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. பொதுவாக கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு ரூ.1000 வரை தேவைப்படுகிறது. இதில் 12 சிலிண்டர்களுக்கு ரூ.350 வரை மானியமானது வழங்கப்படும்.

இதில் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 கோடி பேர் பயன்பெறுகிறார்கள். இந்த மானியம் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் நிலையில் இந்த பணம்  உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் நீங்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும். அதாவது உடனடியாக டிஜிட்டல் கேஒய்சி செய்து முடிக்க வேண்டும். மேலும் இதை செய்து முடிக்காவிட்டால் மானியப்பணம் கிடைக்காது.