
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கட்சியில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர்கள் லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா சினிமாவை தாண்டி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள் என்றே சொல்லலாம். இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா விஜயின் வெற்றி கழகத்தில் இணை இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.