போலந்து நாட்டில் பியனஸ் அயர்ன்ஸ் என்ற பகுதியில் 30 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் அர்ஜென்டினா காலில் பந்து ஜெர்சி அணிந்த வாலிபர் ஒருவர் ஏற முயன்றுள்ளார். இவர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கட்டிடத்தில் ஏற முயன்ற நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வாலிபர் தன்னை ஒரு ஸ்பைடர் மேன் என நினைத்துக்கொண்டு கட்டிடத்தில் ஏறிய நிலையில் இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்புத் துறையினர் வாலிபரை தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 36 வயதான மார்சின் பானோட் என்பது தெரிய வந்தது. இவர் இதுபோன்று இதற்கு முன்பு பல சாகசங்களை செய்துள்ளாராம். இவரை சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் பின் தொடரும் நிலையில் பிரபலமாவதற்காகவே இப்படி ஒரு சாகசத்தை செய்துள்ளதாக கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.