
ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே பாண்டியன் தான் காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இதன் காரணமாக தற்போது விகே பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே தான் அரசியலுக்கு வந்ததாகவும் பதவி மற்றும் பொறுப்புக்காக அரசியலுக்கு வரவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பிஜூ ஜனதா தளம் தோல்வி அடைந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன் எனவும் விகே பாண்டியன் தெரிவித்துள்ளார்.