எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
உலகின் உயரமான எவரெஸ்ட் மலையில் ஏற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவரெஸ்ட் மலையில் ஏறுகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன் குப்பைகளை நேபாள அரசு அகற்றியுள்ளது.
மேலும் 4 மனித உடல்களும் அகற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதியிலிருந்து மொத்தம் 55 நாட்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டதாகவும் நேபாள அரசு கூறியுள்ளது
