கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை கேரளாவில் உள்ள கோழிகோடு, வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஆலப்புழா, எர்ணாகுளம், இடிக்கி, பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.