தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பயந்து ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணாமலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் தேர்தல் தோல்வி குறித்தும், செய்தியாளர் சந்திப்பு எப்போது? என்றும் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அவர், “அண்ணா 4 மணிக்கு ஆபிஸில் பாத்துருவோம் அண்ணா… 4 மணிக்கு ஆபிஸில் பாத்துருமோம் அண்ணா…” என்று சொல்லிவிட்டு காரில் வேகமாக ஏறி சென்றார்.