தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பேபி ஜான் என்ற இந்தி படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. அதில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் முத்தக்காட்சியில் நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்த படத்தில் லிப் லாக், படுக்கையறை காட்சிகள் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இவர் முத்த காட்சியில் நடிக்க விருப்பமில்லை கோடி பணம் கொடுத்தாலும் அது போன்ற காட்சியில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
