தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது கங்குவா, தி கோட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இவர் ஒரு நாளைக்கு ரூ‌.12 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார். மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.