கனடா நாட்டில் வான்கூவர் என்ற நகர் உள்ளது. இங்கு கடந்த 1990 மற்றும் 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ராபர்ட் பிக்டன் (71) என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இவர் பன்றி பண்ணை ஒன்றும் நடத்தி வந்துள்ளார். அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்திய போது பிரிட்ஜில் இளம் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி  வைக்கப்பட்டது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில் 49 இளம்பெண்களை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டது தெரியவந்தது.

அந்த இளம் பெண்களின் உடலை அவர் பன்றிகளுக்கு இறையாகப் போட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில் அவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் ராபர்ட் வான்கூவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி ராபர்ட் மற்றும் சிறையில் இருந்த சக கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ராபர்ட்டை கைதிகள் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் தற்போது சிகிச்சை ‌ பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.