
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தன்னுடைய தந்தை மற்றும் தம்பியை கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பி ஓடிய சிறுமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் தனது தந்தை மற்றும் 9 வயது தம்பியை கொலை செய்துள்ளார்.
உடலில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க உடலை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரீசரில் வைத்துள்ளார். அதன் பிறகு தலைமறைவான சிறுமியை தேடி வந்த போலீசார் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் வைத்து அவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரு மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.