
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மே மாதம் 10-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியின் போது பாதுகாப்பு வளையத்தை தாண்டி ரசிகர் ஒருவர் தோனியை பார்க்க ஓடி வந்தார். அப்போது டோனி அவருக்கு கை கொடுக்காமல் சிறிது நேரம் ஓடி அந்த ரசிகரிடம் விளையாடினார். அதன் பிறகு அந்த ரசிகர் தோனியின் கால்களை தொட்டு வணங்கினார். அதன் பிறகு மைதானத்தில் நின்ற காவலர்கள் அவரை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் தோனியை சந்தித்த ரசிகர் தற்போது கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தோனியை பார்ப்பதற்காக அவர் தடுப்பு சுவர் ஏறி குதித்து மைதானத்திற்குள் சென்று அவரின் கால்களை தொட்டு வணங்கினார். அப்போது டோனி அவரிடம் எதற்காக இவ்வளவு மூச்சு வாங்குகிறது என்று கேட்டார். அதற்கு அந்த ரசிகர் என் மூக்கில் பிரச்சனை இருப்பதால்தான் இப்படி மூச்சு வாங்குகிறது என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் தோனி உங்கள் அறுவை சிகிச்சை பற்றி கவலைப்பட வேண்டாம் அதற்கு நான் பொறுப்பு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகரின் அறுவை சிகிச்சைக்கு தோனி உதவுவதாக உறுதி கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.